இலங்கை 2026 ஐ வரவேற்கிறது; ஆனால் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் இடம்பெயர்ந்து கூடாரங்களில் 

 டிட்வா சூறாவளி ஏற்படுத்திய அழிவுகளுக்குப் பிறகு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், நாடு புத்தாண்டை வரவேற்ற வேளையில், மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,000-க்கும் அதிகமான மக்கள் இன்னும் இடம்பெயர்ந்து கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டின் ஏனைய பகுதிகள் புத்தாண்டைக் கொண்டாட்டங்களுடன் வரவேற்ற நிலையில், பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் நிரந்தர தங்குமிடம் இன்றி தினசரி இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

பேரழிவு ஏற்பட்ட உடனேயே மக்கள் மற்றும் அமைப்புகள் உதவ முன்வந்த போதிலும், தற்போது மக்களின் கவனம் குறைந்துவிட்டதாகவும், தங்களின் நிலைமை பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த போதிலும், ஹட்டன் உள்ளிட்ட மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இதுவரையில் தங்களது கவலைகளைக் கண்டுகொள்ளவில்லை என்றும், இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளனர்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி:

  • தற்போது 7,781 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 24,431 பேர் இன்னும் 264 முகாம்களில் தங்கியுள்ளனர்.

ஹட்டனைச் சேர்ந்த ஒரு பெண் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கையில், நிலச்சரிவில் தனது முழு வீட்டையும் இழந்துவிட்டதாகவும், தற்போது தனது ஐந்து பேர் கொண்ட குடும்பம் மூன்று பேர் மட்டுமே வசிக்கக்கூடிய உறவினரின் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறினார். கிராம உத்தியோகத்தர் அப்பகுதிக்கு வந்தபோதிலும், இழப்பீடு குறித்து எந்தப் பேச்சும் இல்லை என்றும், மாறாக நிலம் இழக்கப்பட்டுவிட்டதால் குடும்பமே சொந்தமாக வீட்டைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடப்புத்தகங்கள் மற்றும் இதர கல்விப் பொருட்கள் அழிந்துவிட்டதால், குழந்தைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி பள்ளிக்குச் செல்வதில் சிரமப்படுவதாக மற்றொரு வதிவாளர் கூறினார். குறைந்த இடவசதி, அந்தரங்கமின்மை மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை இவர்களின் அன்றாட வாழ்க்கையாக மாறியுள்ளன.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட சில நன்கொடைகளைச் சில அரச அதிகாரிகள் எடுத்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத் துண்டுகள் (Sanitary pads) உள்ளிட்ட பொருட்களும் அடங்கும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து  கருத்து தெரிவித்த சிரேஷ்ட அரச அதிகாரி ஒருவர், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, பேரிடர் நிவாரணத்திற்காகப் பெறப்படும் நன்கொடைகள் முறையான பொறிமுறையின் மூலம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். விநியோகத்தைக் கண்காணிக்க நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட உண்மையான நபர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிகள் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு