வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஹேரத், “தூதுவர்ஜூலி சங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்க-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்காகவும், குறிப்பாக ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட விரைவான ஒருங்கிணைந்த உதவிகளுக்காகவும் நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்” என்று கூறினார்.

அவர் தனது ‘X’ தளப் பதிவில், தூதுவர் தனது அடுத்த பணியைத் தொடரவுள்ள நிலையில், இலங்கை தனது நல்வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவிப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
