ஊழியர் சேமலாப நிதியம்-ஓய்வூதியமாக மாற்றும் திட்டம் எதுவுமில்லை: அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதி

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றிற்கு பதிலாக பதிலாக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ  தெரிவித்தார்.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சர், EPF மற்றும் ETF பங்களிப்புகளுக்குப் பதிலாக ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாகக் கூறப்படும் செய்திகளை நிராகரித்ததுடன், அத்தகைய கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் விவரித்தார்.

EPF மற்றும் ETF நிதிகள் மக்களுக்குச் சொந்தமானவை என்றும், பங்களிப்பாளர்கள் ஓய்வு பெறும்போது எந்தத் தடையுமின்றித் தங்களது சேமிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிதியில் சுமார் 30 சதவீதத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதுள்ள ஊழியர் நன்மைகளை குறைக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் கூறினார்.

“எமது அரசாங்கம் யாருடைய உரிமைகளையும் குறைக்கும் வகையில் செயற்படாது. மாறாக, மேலதிக நன்மைகளை வழங்குவதற்கே நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பெர்னாண்டோ, எதிர்காலத்தில் ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த முடியுமா என்பது குறித்து பொதுமக்களிடையே கலந்துரையாடல்கள் எழுந்துள்ள போதிலும், EPF நிதியை ஓய்வூதியத் திட்டமாக மாற்றவோ அல்லது தற்போதுள்ள மொத்தக் கொடுப்பனவுகளுக்குப் பதிலாக ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தவோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

“மக்களின் கடின உழைப்பின் மூலம் சேமிக்கப்பட்ட பணம் அவர்களின் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். சமூகத்தில் பல விவாதங்கள் இருக்கலாம், ஆனால் EPF நிதியை ஓய்வூதிய முறைக்கு மாற்றும் எந்த முடிவையும் அரசாங்கம் எடுக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்