டிட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை மீளக் கட்டியெழுப்ப சீனா உதவி: அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கோரிக்கையை ஏற்று வாங் யீ உறுதி

‘டிட்வா’ (Ditwah) சூறாவளி அனர்த்தத்தினால் சேதமடைந்த வீதிகள், ரயில்வே பாதைகள் மற்றும் பாலங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தனது தனிப்பட்ட தலையீட்டை உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு மேற்கொண்ட குறுகிய கால விஜயத்தின் போது, அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டிட்வா சூறாவளிக்குப் பிந்தைய இலங்கையின் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இது குறித்து அமைச்சர் ஹேரத் விடுத்துள்ள அறிக்கையில், “பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட வீதிகள், ரயில்வே பாதைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புவதில் சீன அரசாங்கத்தின் உதவியை நான் பிரத்தியேகமாகக் கோரினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் வாங் யீ, இதற்காகத் தனது தனிப்பட்ட தலையீட்டை வழங்குவதாக உறுதியளித்ததுடன், இலங்கை விரைவான மீட்சியை நோக்கிய சரியான பாதையில் செல்வதாகத் தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அத்துடன் சீன அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு வாங் யீயின் இந்த விஜயம் அமைந்துள்ளது. ஜெய்சங்கரின் விஜயத்தின் போது, டிட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக 100 மில்லியன் டொலர் மானியம் உட்பட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா உறுதியளித்திருந்தது. வீதிகள், ரயில்வே, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத் துறைகளை மீளக் கட்டியெழுப்பவும், அனர்த்த முகாமைத்துவத் தயார்நிலையை வலுப்படுத்தவும் உதவுவதாக இந்தியா ஏற்கனவே உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்