இலங்கைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றி வெளியேறவுள்ள ஜூலி சங், நாட்டின் தெற்குக் கடற்கரைப் பகுதியே – அலைச்சறுக்கு -விளையாட்டிற்குச் சிறந்த இடமெனத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஒரு சுற்றுலாப் பயணியாக மீண்டும் இலங்கைக்கு வர விரும்புவதாகத் தெரிவித்த அவர், தனது அனுபவத்தை ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளார்:

“நான் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண்ணாக இருந்தபோதிலும், இதற்கு முன்பு சர்பிங் செய்ய முயற்சித்ததே இல்லை. ஆனால், இலங்கையில் ஒரு பொறுமையான ஆசிரியரின் உதவியுடன் எனது பயத்தை வென்று, இறுதியாக சர்பிங் போர்டில் ஏறினேன். மீண்டும் ஒரு சுற்றுலாப் பயணியாக வந்து அதிக பாடங்களைக் கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன்! இலங்கையின் தெற்குக் கடற்கரை தான் சிறந்தது,”
என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இப்பகுதியின் அழகிய கடற்கரை மற்றும் அலைச்சறுக்குக்கு ஏற்ற சூழலையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.