மூத்த ஊடகவியலாளரும் பாதுகாப்பு ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ், இன்று காலை தனது 81வது வயதில் காலமானார்.
பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆழமான அறிக்கைகளுக்காக சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற அத்தாஸ், ‘சண்டே டைம்ஸ்’ (Sunday Times) இதழில் யுத்த கால பாதுகாப்பு நிலைமை குறித்து எழுதிய சர்ச்சைக்குரிய மற்றும் செல்வாக்குமிக்க கட்டுரைகளுக்காக பரந்த அங்கீகாரத்தைப் பெற்றார்.
பின்னர் ‘சண்டே டைம்ஸ்’ இதழின் (Consulting Editor) ஆகப் பணியாற்றிய அவர், இலங்கையிலும் அதற்கு அப்பாலும் பாதுகாப்பு சார் ஊடகத்துறையை வடிவமைப்பதில் தொடர்ந்து பங்களிப்பு வழங்கினார்.
அன்னாரின் பூதவுடல் இன்று காலை 9.00 மணி முதல் இலக்கம் 11C/1, சிறிவர்தன வீதி, ஹில் ஸ்ட்ரீட், தெஹிவளை என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் தெஹிவளை முஸ்லிம் மயானத்தில் நடைபெறும்.
