இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெற்றுச் செல்லும் நோக்கில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இன்று அலரி மாளிகையில் சந்தித்தார்.


இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் தூதுவர் ஆற்றிய சேவை மற்றும் பங்களிப்பிற்காக பிரதமர் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் வழங்கிய சரியான நேரத்திலான உதவிகளுக்காக தனது விசேட பாராட்டுகளையும் பிரதமர் இதன்போது வெளிப்படுத்தினார்.
