எதிர்க்கட்சியின் “திறமையான, மிகவும் அவசியமான மற்றும் முற்போக்கான” முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு கலந்துரையாடவுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, அரச துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய (Work from home) அனுமதிக்கும் முன்மொழிவை மகளிர் விவகார அமைச்சு பரிசீலித்து வருகின்றது.
இது குறித்து தெரிவித்த பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன, இந்த ஆலோசனையை “திறமையான மற்றும் மிகவும் தேவையானது” என்று விவரித்ததுடன், கலந்துரையாடல்களின் பின்னர் அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் போன்ற ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் பொருளாதாரத்தில் பெண் உழைப்பாளர்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “அதிகப்படியான பெண்களைப் பணியாளர்களாக உள்வாங்குவதற்கு நாட்டுக்கு ஒரு திட்டம் தேவை, மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த யோசனை மிகவும் முற்போக்கான ஒன்றாகும்” என்று கலாநிதி சுதர்ஷன தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாமிந்தாராணி கிரெல்லாவினால் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. பெண்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிப்பது தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் என்று அவர் வாதிட்டார்