இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மறு-ஏற்றுமதி ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாக துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைக்க அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்அநுர கருணாதிலக்க உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த, துறைமுகங்கள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு, அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டதாக ‘லங்காதீப’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன:
-
தற்போது சுமார் 8,000 கொள்கலன்கள் (Containers) விடுவிப்பிற்காகக் காத்திருக்கின்றன.
-
குறைந்த அபாயமுடைய கொள்கலன்களை புதிதாக நிறுவப்பட்ட புளுமெண்டல் (Bloemendhal) முனையத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ், கொள்கலன்களை விடுவிக்கும் பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
