டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சருக்கும் SLT மொபிடெல் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் அமைச்சில் விசேட கலந்துரையாடல்.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எராங்க வீரரத்ன அவர்களுக்கும், SLT மொபிடெல் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் (13 தொழிற்சங்கங்கள்) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
SLT மொபிடெல் நிறுவனம் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து ஆழமான ஆய்வை மேற்கொள்வதும், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய விரைவான வழிமுறைகள் குறித்து அரசாங்கத்தின் அவதானத்தை ஈர்ப்பதுமே இக்கலந்துரையாடலின் முதன்மை நோக்கமாகும்.
இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர், நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முன்னிலை வகிக்கும் SLT மொபிடெல் நிறுவனத்தின் ஊழியர் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதும், நிறுவனத்தின் வினைத்திறனை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாகும் என்று வலியுறுத்தினார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அடையாளம் காணப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டல்களை வழங்கினார்.
இந்த கலந்துரையாடல், நிறுவனத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்காக நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பாகவும் அமைந்தது.
இந்தச் சந்திப்பில் SLT மொபிடெல் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மொதிலால் டி சில்வா, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் SLT மொபிடெல் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டன