சீன முதலீட்டாளர்கள்- இலங்கையில் பயன்படுத்தப்படாத நிலங்களை ஏற்றுமதி விவசாயத்திற்காக பயன்படுத்த ஆர்வம்

இலங்கையில் பயன்படுத்தப்படாத நிலங்களை ஏற்றுமதி விவசாயத்திற்காகப் பயன்படுத்த சீன முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 


சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் பயன்படுத்தப்படாத நிலங்களை ஏற்றுமதி விவசாயத்திற்காக இலக்கு வைத்துள்ளனர்

21 ஜனவரி 2026 |

சீன வர்த்தக சபையின் (Chinese Chamber of Commerce) பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கையின் விவசாய அமைச்சரைச் சந்தித்து, ஏற்றுமதிக்காக பழங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதாக அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தற்போது பயன்படுத்தப்படாத நிலங்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான பால் பண்ணைகளை மேம்படுத்தவும், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற ஏற்றுமதியை மையமாகக் கொண்ட விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யவும் இந்தத் தூதுக்குழு இலக்கு வைத்துள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிகளை எளிதாக்குவதற்காக காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் மகாவலி அதிகார சபை ஆகியவற்றின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சந்திப்பின் போது, பிரதிநிதிகள் குழுவினர் அமைச்சர் கே.டி. லால்காந்தவுடன் பல முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர். சீன வர்த்தக சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சர் சாதகமாகப் பதிலளித்துள்ளார்.


Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா