இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கத் தனது வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மேலாண் இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பிரதமர்ஹரிணி அமரசூரியவைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இலங்கை மக்களும் நாடும் வெளிப்படுத்திய அசாதாரணமான மீளெழுச்சியினை கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பாராட்டினார்.
அமரசூரியவைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2026 உலகப் பொருளாதார மன்றத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இலங்கை மக்களும் நாடும் வெளிப்படுத்திய அசாதாரணமான மீளெழுச்சியினை கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பாராட்டினார்.

இலங்கை தனது பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மீட்சி முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து இலங்கைக்கு பக்கபலமாக இருக்கும் என்று ஜார்ஜீவா உறுதியளித்தார்.
