2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையில் பங்களாதேஷிற்கு பதிலாக பதிலாக ஸ்கொட்லாந்துஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அறிக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபை (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி கடுமையாக எதிர்த்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரு “அநீதி” என்று கூறிய அவர், இரட்டை நிலப்பாடுகளைத் தவிர்க்குமாறு ஐசிசி-யை வலியுறுத்தியுள்ளார்.
எந்தச் சூழ்நிலையிலும் வங்கதேசத்தை தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானின் நிலைப்பாடு என்று கூறிய நக்வி, சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேசம் ஒரு முக்கிய பங்குதாரர் என்று விவரித்தார்.
இது குறித்து மொஹ்சின் நக்வி கூறுகையில்:
“இது வங்கதேசத்திற்கு இழைக்கப்படும் அநீதி. இதையே நான் ஐசிசி கூட்டத்திலும் கூறினேன். உங்களிடம் இரட்டை நிலப்பாடுகள் இருக்கக்கூடாது. அனைத்து நிலைகளிலும் வங்கதேசம் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும்.”
மேலும், பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டால், தங்கள் நாடு இந்தத் தொடரிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
“நாங்கள் எங்கள் பிரதமர் திரும்புவதற்காகக் காத்திருக்கிறோம். பாகிஸ்தான் அரசாங்கம் முடிவெடுத்தால், நாங்களும் டி20 உலகக்கோப்பையிலிருந்து விலகுவோம். அதன் பிறகு ஐசிசி 22-வது அணியைத் தேடிக்கொள்ளட்டும்,” என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
இத்தகைய விவகாரங்களில் அரசாங்கத்தின் கொள்கையைப் பின்பற்ற பிசிபி கடமைப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இப்போட்டியில் பங்கேற்பது தொடர்பான அரசியல் உணர்வுகளையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.