2018-2019 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், இலங்கையின் பழ வௌவால்களில் (Fruit Bats) நிபா வைரஸ் (Nipah virus) கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது தற்போதும் பரவ வாய்ப்புள்ளதாகவும் பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.
‘bioRxiv’ தளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டி அவர் தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“2018-2019 காலப்பகுதியில் கொழும்பில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இலங்கைப் பழ வௌவால்களிடம் நிபா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அது இப்போதும் நம்மிடையே இல்லாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. மனிதர்களுக்குத் தொற்று ஏற்பட்டால், அதன் அறிகுறிகள் பொதுவாக 4 முதல் 14 நாட்களுக்குப் பிறகு தென்படும்.”