அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் அதிகரித்து வரும் மாற்றங்கள் நிலையற்ற தன்மை காரணமாக காரணமாக, 2026 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் இலங்கை 1.62 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
“வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மை மற்றும் வளரும் நாடுகளின் ஏற்றுமதியாளர்கள் மீதான தாக்கங்கள்: இலங்கையின் ஒரு ஆய்வு” (Trade Policy Uncertainty and Impacts on Developing Countries’ Exporters: The Case of Sri Lanka) என்ற தலைப்பிலான இந்த ஆய்வை, ‘ஸ்மார்ட் ஃபியூச்சர்’ மையம் (CSF) நடத்தியது. இதனை அனுஷ்கா விஜேசிங்க மற்றும் செனித் அபேநாயக்க ஆகியோர் எழுதியுள்ளனர்.
: தெற்கு மையத்தின் (South Centre) ‘சவுத்வியூஸ்’ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, வர்த்தக வரிகளில் மாற்றங்கள் இல்லாத ஒரு சூழலில், அமெரிக்காவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 3.45 பில்லியன் டொலர்களாக உயர்ந்திருக்கும். ஆனால், தற்போதைய நிலையற்ற சூழலால் இந்த வருமானத்தில் சுமார் 1.62 பில்லியன்டொலர் வரை வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஏப்ரலில் அமெரிக்க நிர்வாகம் வெளியிட்ட “விடுதலை நாள்” (Liberation Day) வரி அறிவிப்புகளால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை, கோவிட் பெருந்தொற்று காலத்தை விடவும் கணிக்க முடியாத ஒரு வணிகச் சூழலை உருவாக்கியுள்ளது. இலங்கைக்கு விதிக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்ட 44 சதவீத வரி விகிதம், பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்ட போதிலும், பல மாதங்களாக நிலவிய குழப்பநிலை உலகளாவிய நிச்சயமற்ற குறியீடுகளை வரலாறு காணாத உச்சத்திற்கு இட்டுச் சென்றது.
ஏற்றுமதியாளர்களின் நிலை: இந்த நிச்சயமற்ற நிலை வர்த்தகத்திற்கு ஒரு தனித்துவமான தடையாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்விற்காக நடத்தப்பட்ட நேர்காணலில், 37 சிரேஷ்ட ஏற்றுமதித் தலைவர்களில் 29 பேர் தங்களது வணிகம் “மிதமானது” அல்லது “மோசமாக” பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆடைத் துறையானது ஓரளவு தாக்குப்பிடித்தாலும், தேயிலை, இறப்பர் மற்றும் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஆடை அல்லாத துறைகள் உடனடி வழங்கல் உத்தரவு இரத்துமற்றும் எதிர்கால வழங்கல் உத்தரவு குறித்த மிகுந்த நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டன.
அமெரிக்க கொள்வனவாளர்களின் நடத்தை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அவர்கள் புதிய வரிகளின் முழுச் சுமையையும் உற்பத்தியாளர்களே ஏற்குமாறு அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் இலங்கையின் ஏற்றுமதி நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்துள்ளது. இதன்காரணமாக, பல நிறுவனங்கள் நஷ்டத்தைச் சகித்துக்கொள்வது அல்லது அமெரிக்கா அல்லாத பிற நாடுகளுக்குத் தமது ஏற்றுமதியைத் திசைதிருப்புவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் நம்பிக்கை: இத்தகைய மோசமான கணிப்புகளுக்கு மத்தியிலும், இலங்கை அரசாங்கம் சாதகமான வர்த்தக உடன்படிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் “95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக” 2025 ஆகஸ்டில் தெரிவித்தார். வரி இல்லாத ஏற்றுமதிப் பொருட்களின் பட்டியலை விரிவாக்க அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
மேலும், ஜனவரி 6, 2026 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வர்த்தக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்ற அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார். ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, வரிப் பாதிப்பைக் குறைக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
புவிசார் அரசியல் அபாயங்கள்: CSF அறிக்கை ஒரு முக்கியமான புவிசார் அரசியல் அபாயத்தையும் சுட்டிக்காட்டுகிறது. ‘ளது. 2024 அக்டோபரில் பிரிக்ஸ்அமெரிக்க எதிர்ப்பு’ கொள்கைகளைக் கொண்ட நாடுகள் மற்றும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இணைய விரும்பும் நாடுகளுக்கு மேலதிகமாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க நிர்வாகம் அச்சுறுத்தியுள் உறுப்பினர் தகுதிக்காக விண்ணப்பித்துள்ள இலங்கை, தற்போது அதன் “கூட்டு நாடு” (Partner Country) அந்தஸ்தைப் பெற முயற்சிப்பது, ஏற்கனவே பலவீனமாக உள்ள ஏற்றுமதிச் சூழலில் சிக்கலான ஒரு அடுக்கு அபாயத்தைச் சேர்த்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்புடன் இணைய எடுக்கும் முயற்சி ஒரு மூலோபாய நடவடிக்கை என்றாலும், அது அமெரிக்காவின் வர்த்தகத் தண்டனைகளைத் தூண்டக்கூடும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.
