தித்வா சூறாவளி 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை– மத்திய வங்கி ஆளுநர்

ஜனவரி 28, 2026 | 

நாட்டின் பல பகுதிகளில் பரவலான பேரழிவை ஏற்படுத்திய தித்வா சூறாவளியினால் (Cyclone Ditwah) ஆரம்பத்தில் ஒரு அதிர்ச்சி ஏற்பட்ட போதிலும், அது 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என  இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க
தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதத்தில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மத்திய வங்கி ஆளுநர் இந்த உறுதிப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

இன்று (28) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய கலாநிதி நந்தலால் வீரசிங்க, 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 4% முதல் 5% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பயணப் பாதையில் இனிவரும் காலங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

வரவிருக்கும் மாதங்களில் பணவீக்கம் எங்களது இலக்கான 5 சதவீதத்தை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தித்வா சூறாவளி நாட்டைத் தாக்கிய உடனேயே பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டன, ஆனால் விநியோகச் சங்கிலிகள் சீரமைக்கப்பட்ட பின்னர் விலைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பின என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

நாடு இந்த பின்னடைவைத் தாண்டி வந்துள்ளதாகவும், பொருளாதார இலக்குகளில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று நம்புவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவும் இந்த பாதிப்புகள் குறித்த மதிப்பீடுகளை நடத்தியுள்ளதை அவர் உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பான விவாதங்கள் வரவிருக்கும் மதிப்பாய்வுகளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கி தனது சமீபத்திய பணவியல் கொள்கை வாரியக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஒரே இரவிற்கான கொள்கை வட்டி விகிதத்தை (Overnight Policy Rate – OPR) 7.75% ஆக பராமரிக்க முடிவு செய்துள்ளது.

உள்நாட்டு முன்னேற்றங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பணவியல் கொள்கை வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாடானது, பணவீக்கத்தை 5% இலக்கை நோக்கி வழிநடத்த ஆதரவாக இருக்கும் என்று வாரியம் கருதுகிறது.

அதேவேளை, பொருளாதாரம் அதன் முழுத் திறனை எட்டுவதற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், பணவீக்கம் இலக்கை ஒட்டி நிலைபெறுவதை உறுதி செய்வதற்காகப் பொருத்தமான கொள்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாக பணவியல் கொள்கை வாரியம் தெரிவித்துள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்