இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் புதிய விமான சேவை ஆரம்பம்

2026 ஜனவரி 31 | 

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் புதிய விமான போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்தும் வகையில், சீனாவின் “கபிடல்” (Capital Airlines) விமான சேவை தனது முதலாவது கன்னிப் பயணத்தை (Inaugural Flight) பெய்ஜிங்கின் டாக்ஸிங் (Daxing) சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேற்கொண்டது.

இந்த கன்னிப் பயணத்திற்காக ஏ-330 எயார்பஸ் (A-330 Airbus) விமானம் பயன்படுத்தப்பட்டது. அந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது நீர்த்தாரை வரவேற்பு (Water Salute) அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.

பெய்ஜிங்கில் இருந்து கபிடல் ஏர்லைன்ஸின் ஜே.டி.- 487 (JD-487) எனும் இந்த விமானம் இன்று பிற்பகல் 01:46 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடைந்தது. இதில் 170 பயணிகளும் 13 ஊழியர்களும் வருகை தந்திருந்தனர்.

இனிவரும் காலங்களில், இந்த விமான சேவையானது ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 02:20 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடைந்து, மீண்டும் அன்றைய தினமே பிற்பகல் 04:20 மணிக்கு பெய்ஜிங் நோக்கிப் புறப்படவுள்ளது. இந்த பயணத்திற்காக 8 மணித்தியாலங்கள் செலவாகும்.

இந்த விமானத்தை வரவேற்கும் நிகழ்வில் இலங்கையிலுள்ள சீன பிரதித் தூதுவர் ஷூ யங்வெய்ங் (Zhu Yanwei), கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்