எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடியைத் தவிர்க்கும் நோக்கில், நுரைச்சோலை (லக்விஜய) மின் உற்பத்தி நிலையத்திற்காக அவசரகால அடிப்படையில் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பின்னணி மற்றும் காரணம்:
-
தரப் பரிசோதனை தோல்வி: தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி, தரப் பரிசோதனையில் (Quality Test) தோல்வியடைந்துள்ளது. இதனால் போதிய நிலக்கரி கையிருப்பில் இல்லாவிட்டால் மின்சாரத் தடை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
-
பருவமழை அச்சம்: மே மாதம் பருவமழை ஆரம்பித்தால் கடலில் நிலக்கரியை இறக்குவது கடினமாகிவிடும். அதற்குள் போதிய கையிருப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள்:
இந்த நிலக்கரி விலைமனுக்கோரல் ர் (Tender) தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது:
-
விதிமுறை மாற்றம்: ஒரு இந்திய நிறுவனத்திற்குச் சாதகமாகவிலைமனுக்கோரல் நிபந்தனைகள் மாற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
-
கால அவகாசம் குறைப்பு: பொதுவாக 42 நாட்கள் வழங்கப்படும் விலைமனுக்கோரல் கால அவகாசம், வெறும் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
-
தண்டப்பணம்: தரமற்ற நிலக்கரியைக் கொண்டு வந்த முதலாவது கப்பலுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.