நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2025 டிசம்பர் 31ஆம் திகதியளவில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர இன்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) நாட்டை பொறுப்பேற்ற போது வெளிநாட்டு கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாகவும், தற்போது அது 6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக குறைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதன்போது தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பிரதி அமைச்சர், 2025 டிசம்பர் 31ஆம் திகதியளவில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.