ஓய்வுபெறும்போது வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற உயர்மட்ட அரச அதிகாரிகளுக்கு, வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர இன்று தெரிவித்தார்.
உயர்மட்ட அரச அதிகாரிகள் ஓய்வுபெறும்போது சலுகை அடிப்படையில் வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 1,900 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், குறித்த திட்டத்தின் கீழ் வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்படவில்லை எனவும், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 563 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறைந்தபட்சம் முன்னுரிமைப் பட்டியலின் (Priority List) அடிப்படையில் தானும், உயர்மட்ட அரச அதிகாரிகளுக்கு வாகன இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், தங்களது ஓய்வின் போது வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற அதிகாரிகளுக்கு வாகன இறக்குமதியை அனுமதிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகக் கூறினார்.
