உலக வங்கி நிறைவேற்றுப் பணிப்பாளர்- இலங்கை அதிகாரிகள் சந்திப்பு

உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் மற்றும் இலங்கை அதிகாரிகள், உலக வங்கியின் நிதியுதவியுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்துள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் பரமேஸ்வரன் ஐயர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

உலக வங்கியின் நிறைவேற்றுச் சபையில் இலங்கை மற்றும் பல பிராந்திய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐயர், திறைசேரி மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லெனும் அவருடன் இணைந்திருந்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான முன்னுரிமைத் துறைகளாக உள்கட்டமைப்பு, விவசாய வணிகம் (Agribusiness), சுகாதாரப் பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பெறுமதி கூட்டப்பட்ட உற்பத்தித் துறைகளை ஐயர் சுட்டிக்காட்டினார். முதலீடுகளை ஈர்ப்பது, உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive growth) ஊக்குவிப்பது மற்றும் முக்கிய அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை செயலாளர் கலாநிதி சூரியப்பெரும வலியுறுத்தினார்.

இந்த விஜயமானது, உலக வங்கியின் ஆதரவுடன் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வு செய்யவும், அவற்றை இலங்கையின் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் எவ்வாறு மேலும் இணைப்பது என்பது குறித்து ஆராயவும் ஒரு வாய்ப்பாக அமைந்ததாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்