
வடமாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளில் யாழ் ஐடிஹப்(IT HUB) புதிய பயணங்கள் 2026 என்ற தி;ட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் யாழ் ஐடிஹப் தெரிவித்துள்ளதாவது
இது தொடர்பில் யாழ் ஐடிஹப் தெரிவித்துள்ளதாவது
வட மாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளில் எமது “புதிய பயணங்கள் 2026” (Puthiya Payanangal) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது . புதியபயணங்கள் 2026 இற்கான அறிமுகம் மாணவர்களுக்கு வழங்கும்போது எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே காணலாம். 

6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க எமது குழுவினர் நேரடியாக பாடசாலைகளுக்குச் சென்று, இந்த நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
உங்கள் பிள்ளைகள் 6, 7, 8 அல்லது 9 ஆம் வகுப்புகளில் படிக்கிறார்களா? மொபைல் போனில் வெறும் வீடியோக்கள் பார்ப்பதோடு நின்றுவிடாமல், அறிவை வளர்க்கும் முகமாக தாமே ஆராய்ந்து செயற்படுத்திப் பார்க்கும் எமது கேமிஃபைட் (Gamified) இணைய செயலியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
எமது மாகாணத்தின் ஒவ்வொரு மாணவ மாணவியும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். தயவுசெய்து இந்தப் பதிவை உங்கள் ஊர் முகநூல் குழுக்கள் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்களில் பகிர்ந்து, 6-9 தர மாணவர்களுக்கு இந்த அரிய வாய்ப்புச் சென்றடைய உதவுங்கள். 
உங்கள் பாடசாலை மாணவர்களுக்கு இன்னும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லையா? பாடப்புத்தக அறிவைத் தாண்டி, மாணவர்களின் புத்தாக்க சிந்தனையையும் தொழில்நுட்பத் திறனையும் தூண்ட எமது குழுவினரை உங்கள் பாடசாலைக்கு அழைக்கலாம்.
எம்மைத் தொடர்பு கொள்ள:
யாழ்ப்பாணம் : 0773540842
கிளிநொச்சி : 0770408802
மன்னார் : 0773546193
வவுனியா : 0773546905
முல்லைத்தீவு : 0773542397
ஏன் இந்தத் திட்டம் முக்கியமானது?
Science, Technology, Engineering, Arts, மற்றும் Mathematics (STEAM) பாடங்களை விளையாட்டு மூலம் மிக எளிதாகக் கற்கலாம்.
இது மாணவர்களிடையே புத்தாக்கச் சிந்தனையை (Innovation) வளர்க்கிறது.
முற்றிலும் இலவசமாக எமது இணைய செயலி மூலம் எங்கிருந்தும் கற்க முடியும்.
ஒன்றிணைந்து நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை தொழில்நுட்ப அறிவால் வலுப்படுத்துவோம்! 
