இலங்கையில் ஸ்கைடைவிங் (Skydiving) நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல்

:இலங்கையில் ஸ்கைடைவிங் (வான்குடை பாய்தல்) நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் கூட்டம்  பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகன்த மற்றும் ‘ஸ்கைடைவ் ஸ்ரீலங்கா’ (Skydive Sri Lanka) அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, ஸ்கைடைவ் ஸ்ரீலங்கா பிரதிநிதிகள் ஸ்கைடைவிங் விளையாட்டு குறித்த விரிவான விளக்கக்காட்சியை வழங்கினர். ஒரு சாகச சுற்றுலா நடவடிக்கையாக இதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் முன்மொழியப்பட்ட செயல்பாட்டு அம்சங்கள் குறித்து அவர்கள் இதன்போது விளக்கமளித்தனர். இலங்கையில் ஸ்கைடைவிங்கை ஒரு புதிய சுற்றுலா ஈர்ப்பாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் நாட்டின் சுற்றுலாத் துறைக்கு அதன் பங்களிப்பு குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டில் ஸ்கைடைவிங் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் சவால்களை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தை பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்.

ஒழுங்குமுறை, பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் ஏனைய தொடர்புடைய விடயங்களை உன்னிப்பாக ஆராயுமாறும், இலங்கையில் ஸ்கைடைவிங்கை அறிமுகப்படுத்துவதற்கான ஒட்டுமொத்த சாத்தியக்கூறுகளை மதிப்பிடுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், இந்த ஆய்வுகளின் முடிவுகள் மீளாய்வு செய்யப்பட்டு, உரிய நேரத்தில் மேலதிக கலந்துரையாடல்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை, வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஸ்கைடைவ் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்