ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை: சூர்யகுமார் யாதவுடன் கைகோர்த்தது எமிரேட்ஸ்

பெப்ரவரி 6, 2026

ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சூர்யகுமார் யாதவை (Suryakumar Yadav) தனது புதிய விளம்பரப் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்துவதன் மூலம் எமிரேட்ஸ் நிறுவனம் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் முப்பது ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் எமிரேட்ஸ் நிறுவனம் ஒரு நீடித்த அடையாளமாக இருந்து வருகிறது. பத்து நாடுகளுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் விரும்பும் நாடுகளில் நடைபெறும் முக்கிய ஐசிசி தொடர்கள், நடுவர்களின் சீருடைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஒன்றிணைக்கும் சிலிர்ப்பான தருணங்களில் ஒரு அங்கமாக இருப்பதன் மூலம், அந்த நிறுவனம் கிரிக்கெட் விளையாட்டின் அங்கமாகவே மாறியுள்ளது.

நவீன கிரிக்கெட்டில் தனது பயமற்ற மற்றும் வழக்கத்திற்கு மாறான துடுப்பாட்ட பாணியாலும், அபாரமான நிதானத்தாலும் சூர்யகுமார் யாதவ் ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். இந்தப் பண்புகள் அவருக்கு ஐசிசி-யின் முதலிட டி20 தரவரிசையைப் பெற்றுத் தந்தன. 2024 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 ஆசியக் கோப்பை ஆகியவற்றில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய அவர், இந்திய டி20 அணியின் கேப்டனாக இன்று விளையாட்டின் மிகவும் மதிக்கப்படும் வீரர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

எமிரேட்ஸ் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாட்டிற்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஒரு மரியாதையாக, இந்த புதிய விளம்பரப் பிரச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நிறைந்த மைதானத்தில், நவீன கால கிரிக்கெட் ஜாம்பவானான சூர்யகுமார் யாதவ் தனது தனித்துவமான துடுப்பாட்ட பாணியை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த உலகளாவிய விளம்பரப் பிரச்சாரம் ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்தைக் குறிப்பதோடு, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ஆர்வலர்களைச் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் போது எமிரேட்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள், எமிரேட்ஸின் ‘ice’ பொழுதுபோக்கு முறைமை மூலம் Sport 24 மற்றும் Sport 24 Extra அலைவரிசைகளில் நேரடிப் போட்டி ஒளிபரப்புகளைக் கண்டு ரசிக்கலாம்.

எமிரேட்ஸின் புதிய விளம்பரத்தில் நடித்தது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில்:

“உயர்மட்ட கிரிக்கெட் என்பது தயாரிப்பு, மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளுதல் மற்றும் அழுத்தத்தின் கீழ் செயல்படும் திறன் பற்றியது. எமிரேட்ஸ் நிறுவனம் தான் செய்யும் அனைத்திலும் இதே விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது. விளையாட்டிற்காக அதிகம் பயணம் செய்யும் ஒருவன் என்ற ரீதியில், உலகத்தரம் வாய்ந்த அனுபவங்களும் வசதிகளும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. கிரிக்கெட் மற்றும் அதன் உலகளாவிய ரசிகர்களுடன் ஆழமான மற்றும் உண்மையான தொடர்பைக் கொண்டுள்ள இந்த பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”

எமிரேட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ், மார்க்கெட்டிங் மற்றும் பிராண்ட் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் புட்ரோஸ் புட்ரோஸ் (Boutros Boutros) கூறுகையில்:

“சூர்யகுமார் யாதவ் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கற்பனையைக் கவர்ந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவருடைய ஆட்டம் அவரைப் பற்றிப் பேசுகிறது, மேலும் அவருடைய ஈர்ப்பு எல்லைகளைத் தாண்டியது. இந்த புதிய விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம், ரசிகர்களுடன் இணைந்து விளையாட்டின் மீதான எங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். கிரிக்கெட் என்பது எங்களின் நீண்டகால விளையாட்டுப் பங்களிப்புகளில் ஒன்றாகும். நாங்கள் எப்போதும் இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக நின்றிருக்கிறோம், அதன் எதிர்காலத்திலும் தொடர்ந்து முதலீடு செய்வோம்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது