பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக, பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஹேரத்: “இலங்கையின் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலித்த பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சகத்திற்கு எனது நன்றிகள். அத்துடன், ஒத்துழைப்பு வழங்கிய பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை(PCB) மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் செயல் விளையாட்டுத்திறன், நட்பு மற்றும் நமது இருதரப்பு உறவுகளின் வலிமையை பிரதிபலிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

READ MORE
இந்தியாவுடன் விளையாட இணங்கிய பாக்கிஸ்தான் – பாக்கிஸ்தான் பிரதமருக்கு நன்றியை தெரிவித்தார் அனுரகுமார
