UNICEF
Lakna Paranamanna

இலங்கையின் அமைதியான வடக்கு கிராமமான முகமாலையில் வசிக்கும் 17 வயதுகவிநிலா சுரேஷ் குமார், பெண் குழந்தைகளுக்குத் தலைமைத்துவத்திற்கான தன்னம்பிக்கை அளிக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதற்கான வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். இளம் பெண்களுக்கு வாய்ப்புகளைத் திறந்து விடுவதன் வலிமையை இவரது கதை ஒரு நினைவூட்டலாக அமைகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கவிநிலா வகுப்பறையில் பேசுவதற்கே தயங்குவார். ஆனால் இன்று, அவர் மாவட்ட அளவிலான சிறுவர் சபையின் தலைவியாக (Chairperson of the District-Level Children’s Council) இருந்து, பல குழந்தைகளின் கவலைகளைச் சமூகத்தின் முன்னிலையில் கொண்டு வந்து தீர்த்து வைக்கிறார். யுனிசெப்பின் (UNICEF) ‘இளம் பெண்கள் வலுவூட்டல் திட்டம்’ அவரது சிறிய கிராமத்தைச் சென்றடைந்தபோது, அவரைப் போன்ற சிறுமிகள் பேசுவதற்கும், கற்றுக் கொள்வதற்கும், தங்களைத் தலைவர்களாகக் கற்பனை செய்து கொள்வதற்கும் அது வழிவகை செய்தது.
உயர்ந்த குரல்
“இந்தத் திட்டத்தில் நான் முதலில் சேர்ந்தபோது, ‘மன்னிப்பு’ (Sorry) என்று கூடச் சொல்லத் தெரியாது,” என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார். “குழந்தைகளுக்கு இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரும், அதை எப்படித் தீர்ப்பது என்று தெரியாது. இப்போது பிரச்சினைகளைக் கையாளுவது, மக்களிடம் பேசுவது மற்றும் தலைமை தாங்குவது எப்படி என்று எனக்குத் தெரியும்.”
இந்தத் திட்டம் தகவல் தொடர்பு, முடிவெடுத்தல், சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் தன்னம்பிக்கை போன்ற அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களை வளர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நடைமுறைப் பாடங்கள் மற்றும் வழிகாட்டல்களுடன் கூடிய திறந்த விவாதங்கள், சிறுமிகளைத் தர்க்கரீதியாகச் சிந்திக்கவும், சரியான முடிவுகளை எடுக்கவும் தூண்டுகின்றன.
சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகளின் (CRPOs) நெருக்கமான வழிகாட்டலால், கவிநிலா தனது குரலைக் கண்டடைந்தார். “சிறுவர் சபைக்கான தேர்தல் நடந்தபோது, நான் போட்டியிட முடிவு செய்தேன். சாதாரணமாக நான் எடுத்திருக்காத ஒரு முடிவு அது,” என்கிறார் அவர். “எல்லோருக்கும் முன்னால் பேசியது எனக்கு தைரியத்தைத் தந்தது. என்னாலும் தலைமை தாங்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன்.”
அந்தத் தேர்தலில் மிக அதிகமான வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.
தலைமைத்துவம்: பிரச்சினைகளைத் தீர்த்தல்
தனது தலைமைத்துவத் திறனை கவிநிலா செயலில் காட்டினார். கிராமத்தில் பாடசாலை அப்பியாசக் கொப்பிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது அவர் அமைதியாக இருக்கவில்லை. “நான் அதிகாரியைத் தொடர்பு கொண்டு பிரச்சினையை விளக்கினேன். அவர் எங்களுக்கு யோசனைகளை வழங்கியதுடன், கொப்பிகளுக்கான நிதியையும் ஏற்பாடு செய்து பிரச்சினையைத் தீர்த்தார்,” என நினைவு கூர்கிறார்.
மிகவும் உணர்ச்சிகரமான விஷயங்களிலும் அவர் தலைமை தாங்கினார். போதைக்கு அடிமையான தந்தை மற்றும் குடும்பச் சண்டைகளால் பாதிக்கப்பட்ட தனது தோழி ஒருவருக்கு, மூத்தவர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் சரியான வழிகாட்டல்களைப் பெற்றுத் தந்தார்.
வலிமையின் பின்னணியில் ஒரு தாய்
இந்த உறுதிமிக்க சிறுமிக்கு பின்னால் அவரது தாய் கலா நந்தினி (44) இருக்கிறார். கவிநிலாளா ஏழு மாத குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை இறந்துவிட்டார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்துறையில் பணியாற்றிய கலா, இப்போது திருமண வீடுகளில் சமைத்தும் உணவு விற்றும் தனது மகளை வளர்க்கிறார். பல வருட மன அழுத்தத்தால் நரம்பு வலி ஏற்பட்டு கைகள் பலவீனமடைந்திருந்தாலும், மகளுக்காக ஓயாமல் உழைக்கிறார்.
“தனியாக இருக்கும் இவரால் எப்படித் தன் மகளை உயர்கல்வி கற்க வைக்க முடியும் என்று மக்கள் கேட்டனர். ஆனால் நான் என் குழந்தையை எப்போதும் நம்பினேன்,” என்கிறார் கலா. யுனிசெப்பின் ‘நேர்மறை வளர்ப்பு’ பயிற்சியால், மகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக ஒரு நண்பராகப் பழகி, இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்கின்றனர்.
தொடரும் கனவு
தற்போது உயர்தரத்தில் (A/L) கலைப் பிரிவில் கற்கும் கவினிளாவின் கனவு ஒரு வழக்கறிஞராவது. “என்னை போன்ற நடுத்தர வர்க்கச் சிறுமியால் இதைச் செய்ய முடியாது என்று சிலர் சொன்னார்கள். ஆனால் நான் அவர்களைத் தவறு என்று நிரூபிப்பேன். ‘தனி ஒரு தாயால் வளர்க்கப்பட்டவள் இன்று ஒரு வழக்கறிஞர்’ என்று மக்கள் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார்.
சட்டம் என்பது அவருக்கு ஒரு தொழில் மட்டுமல்ல, அது ஒரு நோக்கம். “சில நேரங்களில் வழக்கறிஞர்கள் சரியாக வாதாடாததால் அப்பாவி மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அதை நான் மாற்ற விரும்புகிறேன்.”
முன்பு வெட்கப்பட்டு ஒளிந்து கொண்ட சிறுமி இன்று கூட்டங்களில் தைரியமாகப் பேசுகிறார். “முன்பு தலைமைத்துவம் என்பது மற்றவர்களுக்கானது என்று நினைத்தேன். இப்போது அது எனக்கானது என்பதையும் அறிவேன்,” என்கிறார்.
பல சிறுமிகளின் கதை
இலங்கை முழுவதும் கவிநிலா போன்ற நூற்றுக்கணக்கான சிறுமிகள் யுனிசெப் திட்டத்தின் மூலம் தங்கள் கதைகளைத் தாங்களே மாற்றி எழுதி வருகின்றனர். கவிநிலாவின் கண்கள் நம்பிக்கையால் மின்னுகின்றன. “எனது கனவு பெரியது, ஆனால் நான் அங்கு ஒரு ஒரு அடியாகச் சென்றடைவேன்
