அமெரிக்காவின் மத்திய தென்னாசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர்டிரம்ப்
போல் கபூர், இலங்கையின் மூலோபாய ரீதியான புவியியல் அமைவிடம் அதற்கு அளப்பரிய முக்கியத்துவத்தை வழங்குவதோடு, அதனை ஒரு இலக்காகவும் (Coercion) மாற்றக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
தெற்காசியா குறித்த துணைக்குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் பின்வரும் முக்கிய சுட்டிக்காட்டியுள்ளார்:
1. மூலோபாய முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு
இலங்கையைப் போலவே வங்கதேசம், நேபாளம், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் அமைவிடங்களும் அவற்றுக்கு இதேபோன்ற முக்கியத்துவத்தை அளிக்கின்றன.
“அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்த நாடுகள் தங்களது எல்லைகளையும் நீர்வழிகளையும் ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது.”
2. உட்கட்டமைப்பு மற்றும் கடன் பொறி (Debt Trap)
துறைமுகங்கள், தொலைத்தொடர்பு வலையமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு, உயர்தரம் மற்றும் வெளிப்படையான முதலீடுகளை அமெரிக்கா வழங்க முடியும். இது குறித்த நாடுகளை ‘கடன் பொறி இராஜதந்திரத்தின்’ (Debt-trapped diplomacy) ஆபத்துகளிலிருந்து தவிர்க்க உதவும் என்று அவர் கூறினார்.
3. அமெரிக்காவின் ‘அமெரிக்கா முதலில்’ கொள்கை
அமெரிக்காவிற்குத் தெற்காசியா மிகவும் முக்கியமானது. குறிப்பாக 100 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியா ஒரு துணைக்கண்டமாகத் திகழ்கிறது.
-
பொருளாதாரப் பாதுகாப்பு: தெற்காசியாவை ஒரு விரோத சக்தி ஆக்கிரமித்தால், அது உலகப் பொருளாதாரத்தின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதை அமெரிக்கா தடுத்தாக வேண்டும்.
-
கூட்டுறவு: இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கூறியது போல, “அமெரிக்கா முதலில் என்பது அமெரிக்கா தனித்து இயங்குவது என்று அர்த்தமல்ல” (America first does not mean America alone). எமது இலக்குகளை அடைய, சுமையை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும்.
4. எதிர்காலத் திட்டம்
எமது பங்காளிகள் உலகப் பொருளாதாரத்துடன் தங்களை சிறப்பாக இணைத்துக் கொள்ளவும், தங்களது சுயாட்சியைப் பாதுகாக்கவும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இதற்காக வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த அமெரிக்கா விரும்புகிறது, ஏனெனில் வலுவான வர்த்தகம் அனைவரையும் பலமானவர்களாகவும் வளமானவர்களாகவும் மாற்றும் என்று பால் கபூர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
