பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், விசேட தேவையுடைய பெண்கள், தோட்டத் துறை தொழிலாளர் பெண்கள் மற்றும் நகர்ப்புற வறிய பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டல் மற்றும் பால்நிலை சமத்துவம், தீங்கு விளைவிக்கும் சமூக நெறிமுறைகள் மாற்றம் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள THRIVE திட்டமானது அதன் பொறுப்புப் பங்காளர்களில் ஒருவரான Foundation for Innovative Social Development (FISD) நிறுவனம் ஊடாக, திட்டத்தின் ஆரம்ப கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் அவர்களின் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலகம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதன் அவர்கள் அனைவரையும் வரவேற்று ,குறித்த செயற்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இக்கலந்துரையாடலில் Foundation for Innovative Social Development (FISD) நிறுவனம் செயல்பாட்டு கூட்டாளராக தங்களின் செயற்பாடுகள் மற்றும் சமூக நெறிமுறை மாற்ற அணுகுமுறைகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், THRIVE திட்டத்தின் பொறுப்புப் பங்காளர்களில் ஒருவரான Chrysalis நிறுவனம் குறித்த திட்டத்தில் தங்களின் செயல்முறை மற்றும் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்ட செயற்பாடுகள் குறித்த அறிமுகத்தை வழங்கியது.

இந்நிகழ்ச்சி மூலம் மாவட்ட மட்டத்தில் அரச துறைகள் மற்றும் திட்ட பங்குதாரர்கள் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு செயல்பாடுகளை மேற்கொள்வதுடன், பெண் தலைமைத்துவ குடும்பங்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதை நோக்காக கொண்ட திட்டங்களை பிரதேச செயலக ரீதியாக
முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள்,
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், FISD திட்ட முகாமையாளர் சிரோமி சமரவீர,
THRIVE திட்டத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சதுசிகா பெனாண்டோ, கிளிநொச்சி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஹிம் ஸலாம் மற்றும் Chrysalis நிறுவன பிரதி முகாமையாளர் கார்த்திகா, சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் தர்சினி,குறித்த செயற்திட்டத்துடன் தொடர்புடைய மாவட்ட சிறுதொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி உத்தியோகத்தர், மத்திய சுற்றாடல் அதிகார சபை மாவட்ட உத்தியோகத்தர் ,சுற்றாடல் அமைச்சின் உத்தியோகத்தர் ,மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், உள்ளிட்ட துறைசார்ந்த பங்குதாரர்கள்
கலந்து கொண்டனர்.
