அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்த பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு தனது முதல் அதிகாரப்பூர்வ கருத்தைப் பதிவு செய்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஈரான் உச்சத் தலைவரின் இலக்கு வைக்கப்பட்ட கொலையை ஒரு “வஞ்சகமான படுகொலை” என்று அழைத்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகமான TASS தெரிவித்துள்ளது.
அயதுல்லா அலி கமேனியின் மரணம் “மனித நற்பண்புகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அனைத்து நெறிமுறைகளையும்” மீறிய ஒரு படுகொலை என்று ரஷ்யத் தலைவர் விவரித்ததாக TASS குறிப்பிட்டுள்ளது. கமேனி ரஷ்யாவில் ஒரு “சிறந்த அரசுத் தலைவராக” நினைவு கூரப்படுவார் என்றும் புட்டின், கூறினார்.
உக்ரைன் போருக்கு மத்தியில், ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட இராணுவ ஆதரவை ஈரான் ரஷ்யாவிற்கு வழங்கி வருவதுடன், ட்ரோன் தயாரிப்பு நிலையத்தை உருவாக்கவும் உதவி வருகிறது. இந்நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், அவற்றை ஒரு “கண்டிப்பற்ற நடவடிக்கை” மற்றும் “தூண்டப்படாத ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு” என்றும் அழைத்துள்ளது.