ஈரான் தலைநகரில் கமேனிக்கு அஞ்சலிசெலுத்துவதற்காக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

MARCH 1 -2026

பல ஈரானியர்களுக்கு, இன்றைய நாள் அவர்கள் அஞ்சிய செய்தியுடனேயே விடிந்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின்அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

ஞாயிறு காலை வெயில் தெஹ்ரான் தலைநகர் முழுவதும் பரவியிருக்க, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது அஞ்சலியைச் செலுத்த எங்கிலாப் சதுக்கத்தில் (Enghelab Square) திரண்டனர். ஆண்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதபடியும், கடையடைப்பு செய்யப்பட்டிருந்த கடைகளின் முன் சாய்ந்தபடி தங்களது துக்கத்தை அடக்க முடியாமலும் காணப்பட்டனர்.

 பெண்கள் உச்சத் தலைவரின் படங்களை ஏந்தி குழுக்களாக முழக்கமிட்டபடி சதுக்கத்தை நோக்கி அணிவகுத்தனர். இன்னும் சிலர் சாலையோரம் அமர்ந்து தூரத்திலிருந்தே அஞ்சலி செலுத்தினர். அதேசமயம், கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட ஆட்சிக்கு எதிரான போராட்டக்காரர்கள், ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் வீதிக்கு வரவில்லை.

“ஆபரேஷன் எபிக் பியூரி” (Operation Epic Fury): சனிக்கிழமையன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து “ஆபரேஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் ஈரான் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்கின. தெஹ்ரானில் உள்ள உச்சத் தலைவரின் இல்லம் உள்ளிட்ட பல இலக்குகள் இதில் தாக்கப்பட்டன.

NBC

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்