ஜெருசலேம் அருகே உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணை நேரடியாகத் தாக்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் காவல்துறையின் தகவல்படி, ஜெருசலேம் நகருக்கு அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ஈரானிய ஏவுகணை விழுந்து வெடித்ததில் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஸ்ரேலின் அவசரகால மீட்புப் பிரிவின் தகவல்படி, இந்தத் தாக்குதலில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். காயம் அடைந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவார் என மேகன் டேவிட் அடோம் (MDA) அமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து MDA வெளியிட்ட வீடியோவில், ஏவுகணை தாக்கிய இடத்திலிருந்து கரும்புகை எழும்புவதையும், அங்கிருந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடுவதையும் காண முடிகிறது.
ஈரான் நடத்திய தொடர் பழிவாங்கும் தாக்குதல்களில், இஸ்ரேலுக்குள் நேரடியாகத் தாக்கிய மிகச்சில ஏவுகணைகளில் இதுவும் ஒன்று எனக் கருதப்படுகிறது