விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்  புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியமை –மன்னார் மற்றும் முல்லைத்தீவில் கைதுகள்

  நினைவேந்தல் நிகழ்வுகளின் போது  விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியமைக்காக மன்னார் மற்றும் முல்லைத்தீவில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வடக்கில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளைக் காவல்துறையினர் உன்னிப்பாகக் கண்காணித்ததாகவும், சம்பந்தப்பட்ட வர்த்தமானி விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

 விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர் திலீபனின் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் விடயங்களைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு அல்லது தெற்கு என எந்தப் பகுதியில் வசிப்பவர்களாக இருந்தாலும், தமது உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக விஜேபால வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் கூறினார்.

வெளிநாடுகளில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் பழைய புகைப்படங்கள் மற்றும் படங்கள் சில, இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

prageeth1111111111111111
பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விசாரணை: இராணுவப் புலனாய்வு அதிகாரிகளின் ஆறு அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
faizer
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் 'பயங்கரவாதம்' என்பதற்கான வரைவிலக்கணம்என்ன? பைசர் முஸ்தபா 
cbk 11
ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை தவிர வேறு எந்த கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்