ஓமான் தூக்ம் (Duqm) வர்த்தகத் துறைமுகம் ஆளில்லா ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை” என்று பெயர் குறிப்பிடாத பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே துறைமுகம் கடந்த வார இறுதியிலும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது ஒரு தொழிலாளி காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிராந்தியத்தில் நிலவும் பதற்றம்:
-
அண்டை நாடான கத்தாரில், சில எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது. இது உலகளாவிய விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்காகும்.
-
சவுதி அரேபியாவும் தனது நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில்ஓமான் பல ஆண்டுகளாக ஒரு முக்கிய மத்தியஸ்தராக (Mediator) இருந்து வருகிறது. கடந்த மாதம் ஓமானில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) “ஒரு நல்ல தொடக்கம்” என்று விவரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.