ஈராக்கில் ட்ரோன் தாக்குதல்: பிரான்ஸ் இராணுவவீரர் பலி 

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பிரான்ஸ் இராணுவவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில் ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து, பிரெஞ்சு ராணுவத்தில் நிகழ்ந்த முதல் மரணம் இதுவெனக் குறிப்பிட்ட மேக்ரான், உயிரிழந்த வீரர்  அர்னால்ட் ஃபிரியோன் (Chief Warrant Officer Arnaud Frion) என அறிவித்துள்ளார்.

“அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக வீரர்களுக்கும், தேசத்தின் முழு அன்பையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மேக்ரான் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். “எமது வீரர்கள் பலரும் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் அவர்களுடனும் அவர்களது அன்புக்குரியவர்களுடனும் உறுதுணையாக நிற்கும்” என்றும் அவர் கூறினார்.

இப்பகுதியில் இஸ்லாமிய அரசு (ISIS) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடி வரும் பிரெஞ்சுப் படைகள் மீதான இந்தத் தாக்குதல்களை “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று மேக்ரான் கண்டித்துள்ளார்.

“ஈராக்கில் அவர்களின் இருப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாகும். ஈரானில் நடக்கும் போர் இத்தகைய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது,” என அவர் மேலும் வலியுறுத்தினார்.

READ MORE

வடக்கு ஈராக்கில் ட்ரோன் தாக்குதல்: 6 பிரெஞ்சு வீரர்கள் காயம்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்