வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்: கட்டிடங்கள் சேதம், பலர் காயம்

வெள்ளிக்கிழமை அதிகாலை வடக்கு இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்தன மற்றும் பலர் காயமடைந்தனர். அதே வேளையில், இஸ்ரேலிய எல்லைகளை நோக்கிப் புதிய ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள அரபு நகரமான ஜர்ஸீர் (Zarzir) பகுதியில் ஒரு கட்டிடத்தின் மீது ஏவுகணை நேரடியாகத் தாக்கியதில், பல வீடுகள் சேதமடைந்தன. அங்கு ஏற்பட்ட தீயை தீயணைப்புப் படையினர் அணைத்தனர் என்று இஸ்ரேல் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் அவசர சேவைப் பிரிவினர் சுமார் 30 பேருக்குச் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 34 வயது பெண் ஒருவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 17 வயது சிறுமி ஒருவருக்கு உடைந்த கண்ணாடித் துகள்களால் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ‘மேகன் டேவிட் அடோம்’ (MDA) அவசர சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

“நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பல வீடுகள் சேதமடைந்திருப்பதையும், கண்ணாடித் துகள்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டோம்,” என்று எம்பிஏ (MDA) மருத்துவ உதவியாளர் ஈரான் அபோ கூறினார்.

இஸ்ரேல் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், ஒரு கட்டிடம்  சேதமடைந்திருப்பதையும், ஒரு கார் நொறுங்கிக் கிடப்பதையும், வீதிகளில் இடிபாடுகள் சிதறிக் கிடப்பதையும் காண முடிகிறது.

ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் கண்டறிந்ததைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின.

முன்னதாக, இஸ்ரேலை நோக்கி மற்றொரு கட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகவும், அதே நேரத்தில் தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகவும் ஈரானின் அரசு ஊடகமான IRIB தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் லெபனானைத் தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்