BBC
ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான புஜைரா (Fujairah) துறைமுகமானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக முக்கியமான இடமாகும். இது மத்திய கிழக்கின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு வசதிகளில் ஒன்றாகும்.
மேலும், இது கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் (bunkering) ஒரு முக்கிய மையமாகவும் திகழ்கிறது.
முக்கியத்துவம்:
-
புஜைரா துறைமுகமானது பாரசீக வளைகுடாவிற்குப் பதிலாக ஓமன் வளைகுடாவில் அமைந்துள்ளது.
-
இதனால், கப்பல்கள்ஹோர்முஸ் நீரிணை(Strait of Hormuz) வழியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தப் போர் தொடங்கியதில் இருந்து,ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து நடைமுறையில் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று இணையதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ள இந்த வளாகத்திலிருந்து பெரும் புகைக் கூட்டங்கள் எழுவதைக் காண முடிகிறது.
பின்னணி: ஈரானின் எண்ணெய் துறைக்கும் அதன் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமான கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க நலன்கள் (துறைமுகங்கள், கப்பல் தளங்கள் மற்றும் ராணுவ இடங்கள்) அனைத்தும் இனி ஈரானின் முறையான இலக்குகளாக மாறும் என்று அந்நாட்டின் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.