“ட்ரோன் தொடர்பான சம்பவம்” (drone-related incident) காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஒரே இரவில் விமானங்கள் தரையிறங்குவதும் வெளியேறுவதும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய “தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்” எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அதிகாரிகள், “அனைத்துப் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக” விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பயணிகள் கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சில விமானங்கள் துபாயின் மற்றொரு சர்வதேச விமான நிலையமான அல் மக்தூம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.