டெலிகிராம் (Telegram) தளத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில், “ஹெஸ்புல்லாவின் முக்கிய கோட்டைகளுக்கு எதிராக ‘மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தரைவழித் தாக்குதல்களை (limited and targeted ground operations)” தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானிற்குள் படைகள் நுழைவதற்கு முன்னதாக, அப்பகுதியில் உள்ள “ஏராளமான பயங்கரவாத இலக்குகள்” மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக IDF கூறியுள்ளது. இந்த நடவடிக்கையானது, “முன்னணி பாதுகாப்புப் பகுதியை (forward defense area) பலப்படுத்துவதையும்” மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள “பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிப்பதையும்” நோக்கமாகக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெஸ்புல்லாவிற்கு எதிராக “உறுதியுடன் தொடர்ந்து செயல்படுவோம்” என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது