எரிபொருள் தட்டுப்பாடு: புதன்கிழமைகளில்அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோக நெருக்கடி காரணமாக, அனைத்து அரச பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசு எடுத்துள்ள முடிவிற்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

தற்போதைய சவால்களைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் அதேவேளையில், எரிசக்தியை வினைத்திறனாக நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், தடையற்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேவையான உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் பொதுச் சேவைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்த உத்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, நாளை (17) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை கொள்கை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறைக்கும் பொருந்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இருப்பினும், சுகாதாரம், துறைமுகங்கள், நீர் வழங்கல் மற்றும் ரயில்வே போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும், அந்தத் துறைகளுக்கு புதன்கிழமை விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்கும் எதிர்கால நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும் அமைச்சரவையினால் நான்கு முக்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

cbk 11
ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை தவிர வேறு எந்த கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை