17 மார்ச் 2026 |
ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் மோதலில், இலங்கை எந்தப் பக்கமும் சாராது நடுநிலை வகிக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அதிபர் இந்தத் திட்டவட்டமான கருத்தை வெளியிட்டார்.
தற்போதைய மோதல் குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டை ஏற்கனவே மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த மோதலானது எரிசக்தித் துறையில் (Energy Sector) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நிலவரங்களையும் அதன் விளைவாக இலங்கையில் ஏற்படும் பாதிப்புகளையும் உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே ஒரு கண்காணிப்புக் குழுவை (Surveillance Committee) நியமித்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்