இஸ்ரேலின் வான்பரப்பு பாதுகாப்பற்றது’ – ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்து, “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அடுத்தகட்ட மூலோபாயங்களை (Strategies) நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது” என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகேரி காலிபாஃப் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவின் முக்கிய விபரங்கள்:
-
புதிய கட்டம்: “மிகவும் பலத்த பாதுகாப்பு அரணைக் கொண்ட டிமோனா (Dimona) பகுதியில் ஏவப்படும் ஏவுகணைகளை இஸ்ரேலால் இடைமறிக்க (Intercept) முடியாவிட்டால், அது செயல்பாட்டு ரீதியாக இந்த மோதல் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதைக் காட்டுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
பாதுகாப்பற்ற வான்பரப்பு: “இஸ்ரேலின் வான்பரப்பு இப்போது எவ்வித பாதுகாப்பும் அற்ற நிலையில் உள்ளது (Israel’s skies are defenceless)” என்றும் காலிபாஃப் சாடியுள்ளார்.