புவிசார் அரசியல் அதிர்ச்சிகளிலிருந்து விவசாயத்துறை பாதுகாக்கப்படுகிறது

கடந்த ஆண்டு ஈரான் – இஸ்ரேல் பதற்றங்களுக்கு மத்தியில், பல மாதங்களுக்கு முன்பே மேலதிக யூரியாவை அரசாங்கம் கொள்வனவு செய்தது77,000 மெட்ரிக் தொன் உரத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஹோர்முஸ் நீரிணை (Hormuz Strait) மூடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய உடனடி புவிசார் அரசியல் அதிர்ச்சிகளிலிருந்து நாட்டின் விவசாயத்துறை பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு பதற்றங்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், உர இருப்புக்கள், முன்கூட்டிய இறக்குமதிகள் மற்றும் வலுவான நெல் கையிருப்பு ஆகியவை விநியோகத்தைப் பாதுகாக்கவும் விலைகளை ஸ்திரப்படுத்தவும் உதவுகின்றன என்று அவர்கள் கூறினர்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல்கள் தொடங்கிய போதே, அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக மேலதிக யூரியாவை இறக்குமதி செய்திருந்தது. இது விநியோகத்தைப் பாதுகாக்கவும் உர விலைகளை ஸ்திரப்படுத்தவும் உதவியது என்று தேசிய உர செயலகத்தின் (NFS) பணிப்பாளர் சந்தன லோகுஹேவகே தெரிவித்தார்.

அந்தத் தீர்மானத்தின் காரணமாக நாட்டிடம் போதுமான உர இருப்புக்கள் உள்ளன என்றும், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து மேலதிக ஏற்றுமதிகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றத்தைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை ஊடான உர விநியோகத் தடைகள் மற்றும் போக்குவரத்து, காப்புறுதிச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “நாடு 412,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்துள்ளது. இது சாதாரண வருடாந்தத் தேவையான சுமார் 300,000 மெட்ரிக் தொன்னை விட அதிகமாகும். இது விவசாய உற்பத்தியைப் பாதுகாக்க ஒரு இடையக இருப்பை (buffer) உருவாக்கியுள்ளது,” என்றார்.

தற்போது, அரச உர நிறுவனம் மற்றும் ஏனைய விநியோகஸ்தர்களிடம் சுமார் 95,000 மெட்ரிக் தொன் கையிருப்பில் உள்ளதுடன், வர்த்தக நிலையங்கள் மூலம் மேலதிகமாக 7,000 மெட்ரிக் தொன் கிடைக்கப்பெறுகின்றது.

மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிலிருந்து 77,000 மெட்ரிக் தொன் உரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் நடுப்பகுதியில் 17,000 மெட்ரிக் தொன் உரத் தொகுதி எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நெல் கையிருப்பு வலுவாக உள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை மகா பருவ அறுவடையில் இருந்து 45,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல்லைக் கொள்வனவு செய்துள்ளதுடன், 135 களஞ்சியசாலைகளில் சுமார் 85,000 மெட்ரிக் தொன் நெல்லைப் பேணி வருகின்றது.

இந்த இருப்புக்கள் நுகர்வோருக்கு அரிசி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய போதுமானவை என்றும், உணவு விநியோகம் குறித்த உடனடி கவலைகளை இது தணிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சித்திரை புத்தாண்டுக்குப் பின்னர் ஏப்ரல் நடுப்பகுதியில் தொடங்கும் யால (சிறுபோக) சாகுபடிப் பருவத்திற்கு முன்னதாக, விவசாய அபிவிருத்தித் திணைக்களம் ஊடாக உர விநியோகத்தை தேசிய உர செயலகம் தொடங்கியுள்ளது.

“எதிர்வரும் சிறுபோகத்திற்கான கேள்வியைப் பூர்த்தி செய்ய எங்களிடம் போதுமான உர இருப்புக்கள் உள்ளன,” என்று கூறிய லோகுஹேவகே, உற்பத்தி இலக்குகளை அடைவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையிடம் தற்போது சுமார் 102,000 மெட்ரிக் தொன் யூரியா கையிருப்பில் உள்ளது. இது யால பருவத்திற்குத் தேவையான 125,000 மெட்ரிக் தொன்னுக்கு நெருக்கமான அளவாகும். கடந்த ஆண்டின் அதிக விளைச்சலைக் கருத்திற் கொள்ளும்போது, உண்மையான பயன்பாடு இதைவிடக் குறைவாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு