லெபனான் நாட்டின் இரண்டு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் (NNA) செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சுல்தானியே (Sultaniyeh) நகரில் மூவரும், மர்ஜயூன் (Marjeyoun) நகருக்கு அருகில் ஒருவரும் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சினை மேற்கோள்காட்டி NNA தெரிவித்துள்ளது.
