குவைத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான ட்ரோன் (Drone) தாக்குதல்கள் காரணமாக, அங்கிருந்த ராடார் (Radar) கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.:
இந்தத் தாக்குதலில் ராடார் அமைப்பு ‘குறிப்பிடத்தக்க’ (Significant) சேதத்தைச் சந்தித்துள்ள போதிலும், எவருக்கும் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என குவைத் அரசு செய்தி நிறுவனமான ‘குனா’ (KUNA) உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய போர்ச் சூழலில், சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தளம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்தச் சம்பவமும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.