அபுதாபி மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களால், தனது உருக்காலை தளம் “கணிசமான சேதத்தை” சந்தித்துள்ளதாக ஒரு முக்கிய உலகளாவிய அலுமினிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தியாளரும், உலக சந்தைகளுக்கு இரண்டாவது பெரிய விநியோகஸ்தருமான எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் (EGA) நிறுவனம், அதன் அல் தவிலா (Al Taweelah) தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.
“எமது மக்களின் பாதுகாப்பே EGA நிறுவனத்திற்கு எப்போதும் முதன்மையான முன்னுரிமையாகும்,” என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்நாசர் பின் கல்பன் தெரிவித்தார். “நாங்கள் இதனால் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம், மேலும் எமது வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து வருகிறோம்.”
உலகின் மொத்த அலுமினிய உற்பத்தியில் சுமார் 4% மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படும் அலுமினியத்தில் பாதியளவுக்கும் EGA நிறுவனம் பொறுப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது
