சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தலைமையிலான அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள், ஈரான் மீதான போரைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அதிபர் ட்ரம்பை வலியுறுத்தி வருகின்றன. ஒரு மாத காலமாக அமெரிக்கா தலைமையிலான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், தெஹ்ரான் இன்னும் போதுமான அளவு பலவீனமடையவில்லை என்று அவர்கள் வாதிடுவதாக அமெரிக்க, வளைகுடா மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

BEIRUT
அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் குறித்து தங்களுக்குப் போதிய முன்கூட்டிய அறிவிப்பு வழங்கப்படவில்லை என்று போரின் தொடக்கத்தில் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். மேலும், இந்தப் போர் பிராந்தியம் முழுவதற்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்ற தங்களது எச்சரிக்கைகளை அமெரிக்கா புறக்கணித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இருப்பினும், தற்போது ஈரானின் மதகுருமார்களின் ஆட்சியை முற்றாக முடக்குவதற்கு இந்தத் தருணம் ஒரு வரலாற்று வாய்ப்பை வழங்குவதாக அந்த வலய நட்பு நாடுகள் சில வெள்ளை மாளிகையிடம் வாதிட்டு வருகின்றன.
ஈரானியத் தலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் வரை அல்லது ஈரானின் போக்கினில் வியத்தகு மாற்றம் உண்டாகும் வரை இந்த இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடாது என சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் தனிப்பட்ட உரையாடல்களில் தெரிவித்துள்ளனர். பகிரங்கமாக கருத்து தெரிவிக்க அங்கீகாரம் வழங்கப்படாத நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் சிதைந்துப்போன தலைமை, மோதலைத் தீர்க்கத் தயாராக இருப்பதாக ஒருபுறம் ட்ரம்ப் கூறிக்கொண்டாலும், மறுபுறம் விரைவில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் போரை மேலும் தீவிரப்படுத்துவதாக அவர் அச்சுறுத்தி வருகின்றார். இந்த ஊசலாட்டமான நிலைக்கு மத்தியிலேயே வளைகுடா நாடுகளின் இந்த அழுத்தம் கொடுக்கப்படுகின்றது