ரூ. 1000 கோடி (100 பில்லியன்) செலவில் மெகா நிவாரணப் பொதி – ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு!

கொழும்பு: மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்களைக் குறைக்கும் வகையில், 10,000 கோடி ரூபா (100 பில்லியன்) மதிப்பிலான பிரம்மாண்ட நிவாரணத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அடுத்த மூன்று மாத காலத்தைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. எரிபொருள் விலையில் அதிரடி குறைப்பு (மே 1 முதல்)
எரிபொருள், மின்சக்தி மற்றும் எரிவாயு ஆகிய மூன்று துறைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பின்வரும் மானியங்களை அறிவித்தார்:

டீசல்: ஒரு லீற்றருக்கு 100 ரூபா மானியம் வழங்கப்படும்.

பெட்ரோல்: ஒரு லீற்றருக்கு 20 ரூபா மானியம் வழங்கப்படும்.

இதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 20 பில்லியன் ரூபா வீதம், மூன்று மாதங்களுக்கு 60 பில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.

குறிப்பு: சூப்பர் டீசல் மற்றும் சூப்பர் பெட்ரோல் தற்போதைய சந்தை விலையிலேயே விற்கப்படும்.

2. ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விசேட கொடுப்பனவு
ஏப்ரல் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளன:

17,500 ரூபா பெற்று வந்தவர்களுக்கு இனி 25,000 ரூபா.

10,000 ரூபா பெற்று வந்தவர்களுக்கு இனி 15,000 ரூபா.

5,000 ரூபா பெற்று வந்தவர்களுக்கு இனி 7,500 ரூபா.

3. விவசாயிகளுக்கான உர மானியம் உயர்வு
விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் உர மானியங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன:

நெற்செய்கைக்கான உர மானியம் 25,000 ரூபாவில் இருந்து 30,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏனைய மேலதிக பயிர்களுக்கான மானியம் 15,000 ரூபாவில் இருந்து 18,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

4. மீனவர்களுக்கான சலுகைகள்
ஒற்றை நாள் படகுகள்: ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபா வீதம், மாதத்திற்கு 25 நாட்களுக்கு (நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 25 லீற்றர்) மானியம் வழங்கப்படும்.

பல்நாள் படகுகள்: இவற்றுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் தொகையாக (Lump sum) 150,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

இந்த நிவாரணத் திட்டமானது அடுத்த மூன்று மாதங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப, எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

cbk 11
ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை தவிர வேறு எந்த கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
pottala
"என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் நான் அவர்களை மறக்கவில்லை" – கோட்டாபயவுக்கு போத்தல ஜயந்த பதில்
muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை