பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) ஏர்ஃபோர்ஸ் டூ (Air Force Two) விமானத்தில் ஏறியுள்ளார்.
விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,” என்று கூறினார். ஈரான் தரப்பினர் “நல்மனதுடன்” (in good faith) செயல்பட்டால், அவர்களுக்கு “நீட்டிய கரங்களாக” இருக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அவர்கள் “எங்களை ஏமாற்ற முயற்சித்தால்” (try to play us), அமெரிக்கா அதற்கு இணங்காது என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தக் கலந்துரையாடல்களுக்கான வழிகாட்டுதல்களை ட்ரம்ப் தன்னிடம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை தொடங்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்தத் தூதுக்குழுவில் வான்ஸுடன் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இணைந்து கொள்கின்றனர். அதேவேளை, ஈரானிய தூதுக்குழுவின் வருகைக்காக இஸ்லாமாபாத் இன்னும் காத்திருக்கின்றது.