ஹோர்முஸ் நீரிணைக்குள் கப்பல்கள் நுழைவதையும் அங்கிருந்து வெளியேறுவதையும் அமெரிக்க கடற்படை தடுக்கும் -ட்ரம்ப்பின் பதிவுகள் ஏற்கனவே நெருக்கடியில் இருந்த போர்நிறுத்தத்தை மேலும் தீவிரமாக்குகின்றன

BBC

 

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எப்போதுமே விரைவான ஒப்பந்தங்களை விரும்புபவர். இஸ்லாமாபாத்தில் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு அவர் எவ்வாறு பதிலளிப்பார் என்று நாம் யோசித்துக்கொண்டிருந்தோம்… இப்போது அதற்கான அவரது முதல் எதிர்வினையை நம்மால் பார்க்க முடிகிறது.

சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள இரண்டு நீண்ட பதிவுகளில்இ தற்போது
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்று கொண்டிருக்கும் சில கப்பல்களையும் தான் தடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

“ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்திய சர்வதேச கடல் பகுதியில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் தேடித் தடுத்து நிறுத்தத் எனது கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். சட்டவிரோதமான கட்டணத்தைச் செலுத்தும் எவருக்கும் சர்வதேசக் கடற்பரப்பில் பாதுகாப்பான பயணம் கிடைக்காது.”

இந்த “பாதுகாப்பான பயணம்” எவ்வாறு மறுக்கப்படும் என்பதை அந்தப் பதிவுகள் தெளிவாக விளக்கவில்லை. இருப்பினும்இ கடந்த சில மாதங்களில் வெனிசுலாவுக்குச் சென்ற அல்லது அங்கிருந்து வந்த கப்பல்களில் அமெரிக்கா அதிரடியாக ஏறி சோதனையிட்டதை இங்கு நினைவுபூர்வது அவசியமாகும்.

கூட்டு நடவடிக்கை: இந்த முற்றுகையில் “பிற நாடுகளும் ஈடுபடுத்தப்படும்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த நாடுகள் எவை என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஈரானின் ஆதிக்கம்: உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றான
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தி வருகிறது. ஈரானுடன் நெருக்கமான நாடுகள் அல்லது சுமார் 2 மில்லியன்டொலர் (1.5 மில்லியன் பவுண்டுகள்) சுங்கக் கட்டணம் செலுத்தும் கப்பல்கள் மட்டுமே இதுவரை அங்கிருந்து கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.

முரண்பட்ட கருத்துக்கள்: நீரிணையைத் திறப்பதாக ஈரான் உறுதியளித்துள்ளதாக ட்ரம்ப் கூறுகிறார். ஆனால் ஈரானின் பகிரங்க அறிக்கைகளைப் பார்த்தால் அவர்கள் அதைத் தங்களது முக்கிய அரசியல் பலமாகவே கருதுகின்றனர்.

பொருளாதார தாக்கம்: ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை செயல்படுத்தப்பட்டால் உலகச் சந்தைக்கு வரும் கச்சா எண்ணெயின் அளவு மேலும் குறையும். இது உலகளாவிய பொருளாதாரத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்