துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல

அபி கந்தசாமி
மலாய் மெயில்

இலங்கை தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவரின் ஆடை தொடர்பான சீற்றம்மிகுந்த சர்ச்சையில் சிக்குண்டுள்ளது.
ஞானசாரதேரர் மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார்.நீதிமன்றத்தினை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் வழங்கப்பட்ட தண்டனையின் மிகுதி காலங்களை பூர்த்தி செய்வதற்காக அவர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
முன்னைய ஜனாதிபதியொருவர் வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது.அதன் பின்னர் அவர் பௌத்த துறவிகளுக்கான காவிஉடையில்லாமல் சாதாரண உடையில் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரானார்.
இதற்கு பௌத்தபீடத்தின் தலைமை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஞானசார தேரரின் காவிஉடை தொடர்பான தீர்மானத்தினை பௌத்தபீடாதிபதிகளே எடுக்கவேண்டும் சிறைச்சாலை அதிகாரிகள் எதனையும் தீர்மானிக்க முடியாது என தலைமைபீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஒருவர் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் அணிந்திருந்த உடையை அணியலாம் அப்படிபார்த்தால் ஞானசாரதேரர் தனது காவியுடையை அணியலாம் என்பது அவர்களின் வாதம்.
இது பௌத்தபீடாதிபதிகளின் வாதம்- ஆனால் பொதுமக்களின் வாதங்களையும் கேள்விகளையும் இலகுவாக நிராகரிக்க முடியாது. ஏன் பௌத்தமதகுருவின் உடை தற்போது மிகவும் அவசியமான விடயமாக மாறியுள்ளது?

மதகுருமார் தாங்கள் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக தெரிவிக்கின்றனர்.அவர்கள் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றியமைக்குமாறு தங்கள் கடிதத்தில் கோரவில்லை.
ஞானசார தேரர் பராஜக குற்றத்தை (துறவறவிதிமீறல்களில் மிக மோசமான குற்றம்) புரிந்துள்ளார் என்றோ அல்லது அவர் பௌத்த சங்க அமைப்பிலிருந்து நீக்கப்படவேண்டும் என்றோ எந்தவொரு சங்கசபையும் தெரிவிக்கவில்லை என அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
சட்டம் தண்டனை பெற்ற நபர் ஒருவரை சிறையில் அடைத்துள்ளது.அதேவேளை அவர் நீதிமன்றங்களில் ஆஜராகும்போது ஆன்மீக அதிகாரத்தின் சீருடையை ( துறவற ஆடையை) அணிய அனுமதிக்கவேண்டுமா என்பது குறித்து இலங்கையின் மத அதிகார அமைப்பு தற்போது மோதலில் ஈடுபட்டுள்ளது.

காவியுடை என்பது வெறுமனே ஆடைஅல்ல,அது ஒரு வாக்குறுதி,பலருக்கு இது சுயகட்டுப்பாடு,கருணை மற்றும் தன்னை விட மிகப்பெரிய நோக்கத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் வாழ்க்கையை குறிக்கின்றது.
எந்த ஒரு தையல்காரனாலும் தைத்துக்கொடுக்க முடியாத ஒரு தார்மீகநெறிசார் அதிகாரத்தை இது கொண்டுள்ளது.
அதனால்தான் அதனை அணிந்திருப்பவர் எதனை செய்தாலும், அந்த ஆடை அவருக்கு தானாகவே மரியாதையை பெற்றுக்கொடுக்கும் என கருதக்கூடாது.
காவியுடைய அணிந்த ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒவ்வொரு பௌத்தமதகுருவும் பொறுப்பு என்பது கட்டுரையாளரின் வாதமல்ல.அதேபோல ஒரு குற்றச்சாட்டு ஒருவரை குற்றவாளியாக்கிவிடாது.
ஆனால் ஒருவரின் தோற்றம்( காவியுடை) குறித்த சர்ச்சைக்கு அப்பால் சென்று பல விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான பல ஆதாரங்கள் உள்ளன.

மெல்பேர்ன் பௌத்த ஆலயத்தின் முன்னாள் தலைமை பௌத்தமதகுருவுக்கு ஆறு யுவதிகள் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களுக்காக 13 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டள்ளதாக ஏபிசி தெரிவித்துள்ளது.இவர் இலங்கையில் பிறந்தவர்.
பௌத்த துறவியாவதற்காக ஆலயத்திற்கு சென்ற 14 வயது சிறுவனை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்த பௌத்தமதகுருவுக்கு இலங்கையின் உயர் நீதிமன்றம் பத்துவருட சிறைத்தண்டனையை வழங்கியது.
இவைகள் தண்டனைகள். இவற்றை விட மிகவும் கவனமாக கையாளப்படவேண்டிய புள்ளிவிபரங்கள் உள்ளன. 2023 மே முதல் 2026 மே வரையிலான காலப்பகுதியில் தனக்கு பௌத்தமதகுருமார் குறித்த 285 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.இதில் எத்தனைக்கு தண்டனை வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.இவை வெறுமனே குற்றச்சாட்டுகளே ஆனால் சிறுவர் பாதுகாப்பையும் பொறுப்புக்கூறலையும் பாதுகாக்கவேண்டிய தேவையுள்ளது.மாறாக காவியுடையை தேசிய விவாதத்தின் மையப்பொருளாhக மாற்றிவிடக்கூடாது.

காவியுடை அணிந்திருப்பவர் வன்முறையிலோ அல்லது அரசியல் நோக்கங்களிலோ ஈடுபடமுடியாதவர் அல்ல என்பதை வரலாறு மற்றுமொரு சகித்துக்கொள்ள முடியாத சம்பவத்தின் மூலம் எங்களுக்கு நினைவுபடுத்துகின்றது.1959ம் ஆண்டு பௌத்தமதகுரு தல்துடுவே சோமரட்ண அப்போதைய பிரதமர் எஸ்டபில்யூ ஆர் டி பண்டாரநாயக்க மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார். அவர் மறுநாள் உயிரிழந்தார்.சோமவன்ச குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு 1962ம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது வரலாற்றின் கொடுரமான முரண்நகை,அமைதியின் சின்னமான ஆடையை அணிந்திருந்த ஒரு நபர் பிரதமரை நெருங்கி துப்பாக்கி சூட்டினை மேற்கொள்வதற்கு தனது தோற்றத்தினையே பயன்படுத்தினார். அந்த குற்றம் பௌத்த மதத்தை குற்றவாளியாக்கவில்லை.
ஆனால் மதரீதியான தோற்றம் ஒருவரின் நன்னெறி பண்பாட்டிற்கு சான்று எனும் சோம்பேறித்தனமான நம்பிக்கையை குற்றவாளிக்கூண்டில் ஏற்றியது.

இதனை விட இன்னமும் பெரும் பிரச்சினையொன்றுள்ளது.அரசியல் என்பது தொடர்ச்சியாக சிங்கள பௌத்த அடையாளத்தை தேர்தல் கருவியாக பயன்படுத்திவந்துள்ளது.சிங்களத்திற்கு முன்னுரிமை பாதுகாப்பு என்ற வாக்குறுதிகள் அரசியல்வாதிகள் அதிகாரத்தை கைப்பற்ற உதவியுள்ளன.
சிங்கள மொழி மாத்திரம் உத்தியோகபூர்வ மொழியாக மாறியது,இது தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட தாங்கள் புறக்கணி;க்கப்படுகின்றோம் என்ற உணர்வை தீவிரப்படுத்தியது.பின்னர் தீவிரவாத தேசியவாத பௌத்த குழுக்களும்,அரசியல்வாதிகளும் சிறுபான்மை சமூகத்தினரை இலக்காக மாற்;றுவதற்கு உதவினார்கள்.பொதுபல சேனா அமைப்பினரால் நடத்தப்பட்ட பேரணியை தொடர்ந்து 2014 இல் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை மனித உரிமை கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியுள்ளதுடன் முஸ்லீம்களுக்கு எதிரான வனமுறைகளை தூண்டுவதில் நீண்டகால தொடர்புடைய ஒருவராக ஞானசார தேரரை குறிப்பிட்டிருந்தது.

பலநாடுகள் இவ்வாறுதான் சிக்குப்படுகின்றன.முதலில் அரசியல்வாதிகள் தேர்தலில் வாக்குகளை பெற மதத்தினை பயன்படுத்துவார்கள்.அதன் பின்னர் மதஅந்தஸ்த்து என்பது அரசியல் ரீதியில் கேள்வி கேட்க முடியாத விடயமாக மாறிவிடும். பின்னர் சாதாரண சட்டவிடயங்கள் பொறுப்புக்கூறல்கள் கூட மதத்தின் மீதான தாக்குதலாக அர்த்தப்படுத்தப்படும்.
யார் இதற்கு காரணம் யார் பின்னணியில் உள்ளனர் என ஒருவர் கேள்வி கேட்ட மறுநிமிடம், அந்த விவாதம் மதகுருவை கேள்வி கேட்க உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் என மாற்றமடைந்துவிடும்.
மேலும் இலங்கை அரசியலமைப்பு அடிப்படையில் மதச்சார்பற்ற நாடல்ல, இலங்கையின் அரசியலமைப்பு பௌத்தத்திற்கு அதிமுக்கிய இடத்தை வழங்குகின்றது.மேலும் பௌத்த சாசனத்தை பாதுகாப்பது அரசின் கடமை என குறிப்பிட்டுள்ளது.அதேவேளை ஏனைய மதங்களுக்கான சுதந்திரத்தினை உறுதி செய்கின்றது.


அரசியலமைப்பின் மூலம் வழங்கப்படுகின்ற அந்த சிறப்பு அந்தஸ்த்தானது , பொது மத அதிகாரத்தை ஒருவித பணிவுடன் பயன்படுத்தவேண்டும் என்பதையும்,அதனை தண்டனையின் பிடியிலிருந்து விலக்கு என கருதக்கூடாது என்பதையும் மேலும் வலியுறுத்துகின்றது.
சிறைச்சாலை அதிகாரிகள் தங்கள் சொந்த விதிமுறைகளை தவறாக புரிந்துகொண்டிருந்தால் அது குறித்து நீதிமன்றத்தில் ஆராயவேண்டும்.
ஒருதுறவியின் துறவற நிலையை தாங்கள் மாத்திரமே தீர்மானிக்க முடியும் என பௌத்தமதகுருமார் நம்பினால் சிறைச்சாலை ஆடை என்பது பௌத்தத்தின் மீதான தாக்குதல் என நாடாகமாடாமல் அவர்கள் அந்த வாதத்தை முன்வைக்கலாம்.
செய்திகளில் வெளியாகும் காவியுடை பற்றிய தீர்மானம் ஒரு கைதி என்ன அணிகின்றார் என்பது பற்றியது மாத்திரமே.அது கைதியின் சிறைத்தண்டனையை இரத்து செய்துவிடாது,காலத்தை குறைத்துவிடாது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்துவிட்டது.தண்டனை குறித்து நீதிமன்றங்கள் பேச அனுமதிக்கவேண்டும்.

சிறைச்சாலை நிர்வாகம் தனது விதிமுறைகளை தெளிவுபடுத்தவே;ண்டும்.
மதநம்பிக்கைகளை தவறாக பயன்படுத்திய மனிதர்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கண்ணியத்திற்காக போராடுவதை விட தண்டனை பெற்ற ஒரு நபரின் ஆடைக்காக தீவிரமாக போராடும்போது பொதுமக்கள் எதனை பார்க்கின்றார்கள் என்ற கேள்வியை மதகுருமார்கள் தங்களிடம் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும்.
ஒரு கைதி சிறை ஆடையை அணிவதால் ஒரு மதத்திற்கு அவமானம்
ஏற்பட்டுவிடாது,அந்த ஆடையை அணிந்திருந்தவர் சிறைக்கு செல்வதற்கு காரணமாக நடத்தையை கண்டு அஞ்சுவதை விட அவரது காவியுடை களையப்படுவதை கண்டு அதன் சக்தி வாய்ந்த பாதுகாவலர்கள் அஞ்சும்போதே அந்த மதத்திற்கு அவமானம் ஏற்படுகின்றது.
துறவற ஆடையை மீண்டும் வழங்கிவிட முடியும் ஆனால் அது பிரதிபலிக்கும் தார்மீகநெறிசார் அதிகாரத்தை மீட்டெடுப்பது கடினம்
ரஜீவன்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்